தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

JR 2023 :       கூடுதல் விண்ணப்பதாரர்களுக்கான நேர்முக தேர்விற்கான அழைப்பு கடிதம் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு விரைவில் அனுப்பப்படும்.

ஒருங்கிணைந்த தேர்வு (காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் நிலைய அதிகாரிகள்)
காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு
1. கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்..

2. வயது :

விண்ணப்பதாரர்கள் அறிவிக்கை வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயது நிறைவுற்றவராகவும், 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:-

பிரிவு உச்ச வயது வரம்பு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் 32 வருடங்கள்
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் 35 வருடங்கள்
திருநங்கை 35 வருடங்கள்
ஆதரவற்ற விதவை 37 வருடங்கள்
முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் மத்திய காவல் ஆயுதப்படையினர் (அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் முன்றாண்டுகளுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவ வீரர்கள் / மத்திய காவல் ஆயுதப் படையினர் 47 வருடங்கள்
துறை ஒதுக்கீட்டுத் தேர்வில் பங்கேற்கும் காவல் மற்றும் தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 47 வருடங்கள்
3. வகுப்புவாரி இட ஒதுக்கீடு:

அ) ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் அரசு உத்தரவுகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீடு கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:-

பொதுப் பிரிவினர் 31%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 26.5%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) 3.5%
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் 20%
ஆதிதிராவிட வகுப்பினர் 15%
ஆதிதிராவிட (அருந்ததியர்) வகுப்பினர் 3%
பழங்குடியின வகுப்பினர் 1%

ஆ) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

4. சிறப்பு ஒதுக்கீடுகள் :
அ) காவல் மற்றும் தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை காலிப் பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
(i) 20% காவல் துறை இடஒதுக்கீடு.

இரண்டாம் நிலை காவலர்கள், முதல் நிலை காவலர்கள் மற்றும் தலைமை காவலர்கள் மற்றும் இவர்களுக்கு சமமான பதவியில் உள்ள சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் உள்ளவர்கள் 20% காவல் துறை இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கை தேதி அன்று 5 வருடங்கள் பணி நிறைவு செய்தவராக இருத்தல் வேண்டும். காவல் துறை இடஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு தனியாக நடைபெறும்.

(ii) 20% தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை இடஒதுக்கீடு.

தமிழ்நாடு தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறையில் பணிபுரியும் தீயணைப்போர், முன்னனி தீயணைப்போர், தீயணைப்போர் ஓட்டி, எந்திர கம்மியர் ஓட்டி ஆகியோர் 20% தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கை தேதி அன்று 5 வருடங்கள் பணி நிறைவு செய்தவராக இருத்தல் வேண்டும். தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை இடஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு தனியாக நடைபெறும்.

ஆ) 10% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு (காவல் துறைக்கு மட்டும்).

10% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் பொது விண்ணப்பதாரர்களைப் போலவே அனைத்துத் தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் இத்தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் 5 ஆண்டுகளுக்குள் கலந்து கொண்டு பெற்ற விளையாட்டுப் படிவம்- 1 அல்லது படிவம் - 2 அல்லது படிவம் - 3, பெற்றிருத்தல் வேண்டும். விளையாட்டு ஒதுக்கீட்டைக் கோருவதற்குத் தேவையான சான்றிதழ்களின் விவரங்கள் பின்வருமாறு.

விளையாட்டு படிவத்தின் வகை பங்குபெற்ற நிலையின் விவரம் வழங்கும் அலுவலர்
படிவம்-I இந்திய நாட்டின் சார்பாக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர். சம்மந்தப்பட்ட விளையாட்டின், தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் செயலாளர்
படிவம்-II தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொண்டவர் சம்மந்தப்பட்ட விளையாட்டின், தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் செயலாளர் அல்லது மாநில விளையாட்டு சங்கத்தின் செயலாளர்
படிவம்-III பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழக பல்கலைக்கழகம் சார்பாக கலந்து கொண்டவர். இயக்குநர் அல்லது பல்கலைக் கழகத்தின் விளையாட்டு பொறுப்பு அதிகாரி
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் : -

1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல் பந்து 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச் சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளு தூக்குதல் 12. நீச்சல் போட்டி 13. தடகளப் போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கி சுடுதல் மற்றும் 16.சிலம்பம்.

இ. 10% சார்ந்துள்ள வாரிசுக்கான இடஒதுக்கீடு (காவல் துறைக்கு மட்டும்).

(i) பணியிலுள்ள/ ஒய்வு பெற்ற/ மரணமடைந்த / மருத்துவரீதியாக இயலாமையினால் ஓய்வு பெற்ற காவல் பணியாளர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் சார்ந்துள்ள வாரிசுகள் இச்சலுகையை பெறலாம்.

(ii) சார்ந்துள்ள வாரிசுக்கான சான்றிதழை, பெற்றோர் தாங்கள் பணிபுரியும் / கடைசியாக பணியாற்றிய அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் பதவி நிலைக்கு குறையாத உரிய அதிகாரியிடத்தில் பெற வேண்டும்.

(iii) சார்ந்துள்ள வாரிசுக்கான சான்றிதழ் இத்தேர்விற்கான அறிவிக்கைத் தேதிக்குப் பின்னர் பெற்றிருக்க வேண்டும்.

(iv) விண்ணப்பதாரர், சார்ந்துள்ள வாரிசுக்கான சான்றிதழைப் முறையான படிவத்தில் பெறவில்லையெனில் அவர் பொது விண்ணப்பதாரராகக் கருதப்படுவார்.

(v) களப்பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்ககளின் சார்ந்துள்ள வாரிசு ஒதுக்கீட்டிற்கு ஒரே ஒரு வாரிசுதாரர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

(vi) விண்ணப்பதாரர் ஏற்கனவே மத்திய / மாநில அரசின் பணியிலிருந்தால் சார்ந்துள்ள வாரிசுக்கான ஒதுக்கீட்டிற்கு தகுதியற்றவர்.

(vii) வாரிசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்திட தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில், அக்காலிப்பணியிடங்கள், அதே வகுப்பினரைச் சார்ந்த பொது பிரிவிற்க்கு மாற்றம் செய்யப்படும்.

5. தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்றவர்களுக்கான 20% முன்னுரிமை

முதலாம் வகுப்பிலிருந்து இளங்கலை பட்டப்படிப்பு வரை (தகுதி வாய்ந்த இளங்கலை பட்டம்) தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்ற பொது விண்ணப்பதாரர்களுக்கு மொத்த காலி பணியிடங்களில் 20% பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும்.

6. சிறப்புப் பிரிவினருக்கான சலுகைகள் :

அ. முன்னாள் இராணுவத்தினர் / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் / முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள மத்திய ஆயுத காவல் படையினர்:

1. வயது தளர்வு 47 வருடங்கள் வரை வழங்கப்படும்.

2. பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் நிறைவு பெறாத முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு இணையவழி விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் நிறைவு பெறாத முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள மத்திய ஆயுத காவல் படையினர் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.

ஆ. ஆதரவற்ற விதவை :

1. வயது தளர்வு 37 வருடங்கள் வரை வழங்கப்படும் .

2."ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ்" வருவாய் கோட்ட அலுவலர் (RDO) /சார் ஆட்சியர் (Sub-Collector) - /உதவி ஆட்சியர் (Assistant Collector) அவர்களிடமிருந்து பெற்று இணையவழி விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் ஆதரவற்ற விதவைக்கான பிரிவின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

7. திருநங்கை (காவல் துறைக்கு மட்டும்) :

i. வயது தளர்வு 35 வருடங்கள் வரை வழங்கப்படும்.

ii. திருநங்கைகள், ஆண் அல்லது பெண் அல்லது மூன்றாம் பாலினம் என ஏதேனும் ஒன்றினை தனது பாலினமாக தேர்வு செய்து கொண்டு உடற்கூறு அளத்தல் தேர்வு, உடல் தகுதித்தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

iii. திருநங்கைகள், மூன்றாம் பாலினம் என விண்ணப்பித்தால் அவர்கள் பெண் விண்ணப்பதாரர்களாகப் பாவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு 30% இடஒதுக்கீடு பொருந்தும்.

iv. திருநங்கைகள், தனது சாதிக்குரிய சாதிச் சான்றிதழை சமர்ப்பித்தால், அவர்கள் பிற விண்ணப்பதாரர்களைப் போன்று வகுப்புவாரி ஒதுக்கீடு பயன்பெறலாம்.

v. திருநங்கைகள், சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காவிடில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் (MBC) பாவிக்கப்படுவார்கள்.

8.பொது மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண்கள் ஒதுக்கீடு:
வ.எண் விவரம் பொது துறை ஒதுக்கீடு
1. எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்கள் 85 மதிப்பெண்கள்
2. உடல்திறன் தேர்வு 15 மதிப்பெண்கள் விலக்கு அளிக்கப்பட்டது
3. நேர்முகத்தேர்வு 10 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்கள்
4. சிறப்பு மதிப்பெண்கள் 05 மதிப்பெண்கள் 05 மதிப்பெண்கள்
மொத்தம் 100 மதிப்பெண்கள் 100 மதிப்பெண்கள்
9. பொது விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நிலைகள் :

அ. எழுத்துத் தேர்வு

பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு:

i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.

iii. இத்தேர்வானது 100 மதிப்பெண்களுக்கான 100 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான கால அளவு 100 நிமிடங்கள்.(1 மணி 40 நிமிடங்கள்).

iv. தமிழ் மொழித் தகுதித்தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே அடுத்த கட்ட முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மதிப்பீடு செய்ய தகுதிவாய்ந்தவர் ஆவர்.

v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.

vi. 20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.

vii. பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீடு இரண்டிற்கும் சேர்த்து விண்ணப்பித்தவர்கள் பொதுவாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வினை ஒரு முறை மட்டுமே எழுதவேண்டும்.

பகுதி – II. முதன்மை எழுத்துத் தேர்வு:

முதன்மை எழுத்துத் தேர்வானது பகுதி (அ) - பொது அறிவு மற்றும் பகுதி (ஆ) உளவியல் தேர்வு (Psychology Test):- தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Skills), மனத்திறன் (Mental Ability), தொடர்புதிறன் (Communication Skills), மற்றும் தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability) ஆகியவை அடங்கும். எழுத்து தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 70.

1. பகுதி (அ) – 40 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) 80 கேள்விகள்.

2. பகுதி (ஆ) – 30 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) 60 கேள்விகள்.

3. ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண்கள்.

4. தேர்வுக்கான கால அளவு: 2 மணி 30 நிமிடங்கள்.

5.விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

6. அனைத்து கேள்விகளும் இரு மொழிகளில் (தமிழ் & ஆங்கிலம்) இருக்கும்.

ஆ. சான்றிதழ் சரிபார்த்தல் :

(i) பொது விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்த்தல் உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு மற்றும் உடல்திறன் போட்டிகளுக்கு முன்னர் நடைபெறும்.

(ii) சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.அவ்வாறு விண்ணப்பதாரர் அசல் சான்றிதழை சமர்ப்பிக்கத் தவறினால், வகுப்புவாரி,வயது தளர்வு மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டை இழப்பர்.

இ. உடற்கூறு அளத்தல் தேர்வு :
உயரம்
வகுப்பு ஆண்கள் பெண்கள் மற்றும் திருநங்கை
பொதுப்பிரிவினர் (OC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), பிற்படுத்தப்பட்டவகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)], மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் (MBC/DNC) 170 செ.மீ. 159 செ.மீ.
ii. ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST). 167 செ.மீ. 157 செ.மீ.
மார்பளவு அளத்தல் (ஆண்களுக்கு மட்டும்)
சாதாரண நிலையில் 81 செ.மீ.
மூச்சு உள்ளிழுக்கப்பட்ட நிலையில் விரிவாக்கம் 5 செ.மீ.
(81 செ.மீ. - 86 செ.மீ.)
முன்னாள் இராணுவத்தினர்/ இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும்கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவவீரர்கள் / முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் (Ex-CAPF) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள மத்தியஆயுத காவல் படையினர். உடல்கூறு அளத்தல் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஈ. உடற்தகுதித் தேர்வு :
ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் திருநங்கை 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்.
முன்னாள் இராணுவத்தினர்/ இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவ வீரர்கள் / முன்னாள் மத்திய ஆயுத காவல்படையினர் (Ex-CAPF) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள மத்திய ஆயுத காவல்படையினர். 1500 மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

i) உடற்தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

ii)உடற் தகுதித் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே, அடுத்தகட்டத் தேர்வான உடற்திறன் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

உ. உடல்திறன் போட்டி : (மொத்த மதிப்பெண்கள் -15)

விண்ணப்பதாரர்கள் உடற்திறன் போட்டியில் உள்ள அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள வேண்டும்.

(i) ஆண் விண்ணப்பதாரர்கள் :-
வ.எண் நிகழ்வுகள் பூஜ்ய நட்சத்திரம் (0 மதிப்பெண்) ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்)
1 கயிறு ஏறுதல் 5.0 மீட்டருக்கு குறைவாக 5.0 மீட்டர் 6.0 மீட்டர்
2 நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் நீளம் தாண்டுதல் 3.80 மீட்டருக்கு குறைவாக 3.80 மீட்டர் 4.50 மீட்டர்
உயரம் தாண்டுதல் 1.20 மீட்டருக்கு குறைவாக 1.20 மீட்டர் 1.40 மீட்டர்
3 100 மீட்டர் ஓட்டம் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் 100 மீட்டர் ஓட்டம் 15.00 வினாடிகளுக்கும் அதிகமாக 15.00 வினாடிகள் 13.50 வினாடிகள்
400 மீட்டர் ஓட்டம் 80.00 வினாடிகளுக்கும் அதிகமாக 80.00 வினாடிகள் 70.00 வினாடிகள்

1. கயிறு ஏறுதல் மற்றும் நீளம் தாண்டுதல் / உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.

2. 100 மீட்டர் / 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

(ii) பெண் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்கள்:
வ.எண் நிகழ்வுகள் பூஜ்ய நட்சத்திரம் (0 மதிப்பெண்) ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்)
1 நீளம் தாண்டுதல் 3.0 மீட்டருக்கு குறைவாக 3.00 மீட்டர் 3.75 மீட்டர்
2 குண்டு எறிதல் (அல்லது) கிரிக்கெட் பந்து எறிதல் குண்டு எறிதல் 4.25 மீட்டருக்கு குறைவாக 4.25 மீட்டர் 5.50 மீட்டர்
கிரிக்கெட் பந்து எறிதல் 17 மீட்டருக்கு குறைவாக 17 மீட்டர் 24 மீட்டர்
3 ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர் 100 மீட்டர் ஓட்டம் 17.50 வினாடிகளுக்கும் அதிகமாக 17.50 வினாடிகள் 15.50 வினாடிகள்
200 மீட்டர் ஓட்டம் 38.00 வினாடிகளுக்கும் அதிகமாக 38.00 வினாடிகள் 33.00 வினாடிகள்

i. நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் / கிரிக்கெட் பந்து எறிதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.

ii. 100 மீட்டர் ஓட்டம் / 200 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்

iii.முன்னாள் இராணுவத்தினர் / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவவீரர்கள் / முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் (Ex-CAPF) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள மத்திய ஆயுத காவல்படையினர்.

வ.எண் நிகழ்வுகள் பூஜ்ய நட்சத்திரம் (0 மதிப்பெண்) ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்)
1 குண்டு எறிதல் (7.26 kg) 5.0 மீட்டருக்கு குறைவாக 5.0 மீட்டர் 6.0 மீட்டர்
2 நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் நீளம் தாண்டுதல் 3.25 மீட்டருக்கு குறைவாக 3.25 மீட்டர் 4.50 மீட்டர்
உயரம் தாண்டுதல் 0.90 மீட்டருக்கு குறைவாக 0.90 மீட்டர் 1.40 மீட்டர்
3 ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் 100 மீட்டர் ஓட்டம் 17.00 வினாடிகளுக்கும் அதிகமாக 17.00 வினாடிகள் 13.50 வினாடிகள்
400 மீட்டர் ஓட்டம் 85.00 வினாடிகளுக்கும் அதிகமாக 85.00 வினாடிகள் 70.00 வினாடிகள்

i.குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் / உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.

ii. 100 மீட்டர் ஓட்டம் / 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

10. துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நிலைகள் :-
அ. எழுத்துத் தேர்வு
பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு

துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது விண்ணப்பதாரர்களுக்கும் தமிழ்மொழித் தகுதித் தேர்வு ஒன்றாக நடத்தப்படும்.

பகுதி – II (அ). 20% காவல்துறை ஒதுக்கீட்டிற்கான முதன்மை எழுத்துத் தேர்வு:

முதன்மை எழுத்துத் தேர்வானது பகுதி (அ) – பொது அறிவு மற்றும் பகுதி (ஆ) உளவியல் தேர்வு (Psychology Test):- தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Skills), மனத்திறன் (Mental Ability), தொடர்பு திறன் (Communication Skills), தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability), இந்திய தண்டனைச்சட்டம் (Indian Penal Code), குற்ற விசாரணை முறைச்சட்டம் (Criminal Procedure Code), இந்திய சாட்சியச்சட்டம் (Indian Evidence Act), காவல் நிலை ஆணைகள் (Police Standing Orders) மற்றும் காவல் நிர்வாகம் (Police Administration) ஆகியவற்றை உள்ளடக்கியது.

எழுத்து தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 85.

i. பகுதி (அ) – 15 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) 30 வினாக்கள்.

ii. பகுதி (ஆ) – 70 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) 140 வினாக்கள்.

iii. ஒவ்வொரு கேள்விக்கும் 1/2 மதிப்பெண்கள்.

iv. தேர்வுக்கானகாலஅளவு:3 மணிநேரம்.

v. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதிபெற குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பகுதி – II ((ஆ). 20% தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறை ஒதுக்கீட்டிற்கான முதன்மை எழுத்துத்தேர்வு:

முதன்மை எழுத்துத் தேர்வானது பகுதி (அ)- பொது அறிவு மற்றும் பகுதி (ஆ) உளவியல் தேர்வு (Psychology Test):-தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Skills), மனத்திறன் (Mental Ability), தொடர்பு திறன் (Communication Skills), தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability), தீயணைப்பு & மீட்புப்பணி தொடர்புடைய விதிகள் மற்றும் நடைமுறைகள் (Rules & Regulations Relating to Fire & Rescue Services), நிலைய நடைமுறை (Station Routine), தமிழ்நாடு தீயணைப்பு துறை நடைமுறை நூல் (Tamil Nadu Fire Service Manual) மற்றும் தீயணைப்பு மீட்புப்பணித் துறை நிர்வாகம் (Administration of Fire & Rescue Services) ஆகியவற்றை உள்ளடக்கியது.

எழுத்துத் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் - 85.

i. பகுதி (அ) – 15 மதிப்பெண்கள்(கொள்குறி வகை வினா) 30 வினாக்கள்.

ii. பகுதி (ஆ) – 70 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா)140 வினாக்கள்.

iii. ஒவ்வொரு கேள்விக்கும் 1/2 மதிப்பெண்கள்.

iv. தேர்வுக்கான கால அளவு: 3 மணி நேரம்.

v. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஆ. சான்றிதழ்கள் சரிபார்த்தல் :

சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும், விண்ணப்பதாரர்கள், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் அசல்சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும். அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் வயது தளர்வு உரிமைகளை இழப்பர்.

இ. துறைசார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளத்தல் மற்றும் உடல்திறன் தேர்வு ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஈ.உடற்தகுதித் தேர்வு :

i. ஆண் விண்ணப்பதாரர்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்கவேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் ஓடி முடிக்கவேண்டும்.

ii. உடற்தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

11. நேர்முகத் தேர்வு :

i. நேர்முக தேர்வு 10 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ii. விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மற்றும் உடற்திறன் தேர்வு ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். காலிப்பணியிடங்களின் இரண்டு மடங்கு எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

12. பொது விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மாணவர்படை / நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் விளையாட்டுகளுக்காக வழங்கப்படும் சிறப்பு மதிப்பெண்கள். :

நேர்முகத் தேர்விற்க்கு பிறகு விண்ணப்பதாரர்களுக்கு கீழ்கண்டவாறு அதிகபட்சம் 5 சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அ. தேசிய மாணவர்படை (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) :
ஒரு வருட உறுப்பினர் / A சான்றிதழ் ½ மதிப்பெண்
“B” சான்றிதழ் உடையவர்கள் 1 மதிப்பெண்
“C” சான்றிதழ் உடையவர்கள் / சார்பு அலுவலர் – அகில இந்திய அளவில் சிறந்த மாணவர். 2 மதிப்பெண்கள்
ஆ. நாட்டு நலப்பணித் திட்டம் (அதிகபட்சம் 1 மதிப்பெண்) :
1).புதுடெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பு போன்ற தேசிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டமைக்கு / தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஊக்கமுகாம் / மாநில அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறையினால் மாநிலங்களுக்கிடையே நடத்தப்படும் இளைஞர்களுக்கான பரிமாற்ற திட்டங்களில் பங்குபெற்றவர்கள்.
2).நாட்டு நலப்பணித்திட்ட நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக பங்குபெற்றவர்கள் அல்லது அரசு ஆணை நிலை எண் 8, தேதி 21.01.2002-படி மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பங்குபெற்றவர்கள்.
½ மதிப்பெண்
மாநில அளவில் அல்லது தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர் அல்லது புது டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில் கலந்துகொண்ட சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர். 1 மதிப்பெண்.
இ. விளையாட்டுகள் (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்)

அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுகள் : 1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல்பந்து 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச்சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளுதூக்குதல் 12. நீச்சல்போட்டி 13. தடகளப்போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கிசுடுதல் மற்றும் 16. சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பள்ளியின் சார்பாக மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் 1/2 மதிப்பெண்
கல்லூரியின் சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் 1/2 மதிப்பெண்
பல்கலைக்கழகங்களின் சார்பாக கலந்துகொண்டவர்கள் (படிவம் III) (பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான) 1 மதிப்பெண்
மாவட்டங்கள் சார்பாகமாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில்கலந்து கொண்டவர்கள் 1 மதிப்பெண்
தமிழ்நாடு சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் (படிவம் II) 1 ½ மதிப்பெண்கள்
பன்னாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டவர்கள் (படிவம் I) 2 மதிப்பெண்கள்

ஒவ்வொரு வகை சான்றிதழ்களிலும் உயரிய தகுதி கொண்ட சான்றிதழுக்கு மட்டுமே அதிகபட்ச மதிப்பெண் வழங்கப்படும். ஒருவிண்ணப்பதாரர் ஒரே மதிப்பெண்கள் பெற தகுதியுடைய இரண்டு சான்றிதழ்களைப் பெற்றிருந்தால் ஒரு சான்றிதழுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும். ஒரு விண்ணப்பதாரர் சிறப்பு மதிப்பெண்களாக அதிகபட்சம் 5 மதிப்பெண்கள் மட்டுமே கோர முடியும்.

13.(அ) காவல்துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு மதிப்பெண்கள் :
தேசிய காவல் பணித்திறன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் (அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்)
தங்கப் பதக்கம் 5 மதிப்பெண்கள்
வெள்ளிப் பதக்கம் 3 மதிப்பெண்கள்
வெண்கலப் பதக்கம் 2 மதிப்பெண்கள்
(ஆ) தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறை விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு மதிப்பெண்கள் :
மொத்த பணிக்காலத்தில் பெற்ற பதக்கங்கள் (அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்)
குடியரசுத் தலைவரின் தீயணைப்பு பணிக்கான வீரதீரப் பதக்கம் (அல்லது) தீயணைப்பு பணிக்கான வீரதீரப் பதக்கம் (அல்லது) அண்ணா பிறந்தநாளன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான வீரதீரப் பதக்கம் (அண்ணா பதக்கம்). 5 மதிப்பெண்கள்
தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான சிறப்பு பணிப் பதக்கம் (அல்லது) தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா வீரதீரப் பதக்கம் (குடியரசு தினம்) 3 மதிப்பெண்கள்
மெச்சத்தக்கப் பணிக்கான தீயணைப்பு பணிப் பதக்கம் (அல்லது) அண்ணா பிறந்தநாளன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்பு பணிப் பதக்கம் (அண்ணா பதக்கம்). 2 மதிப்பெண்கள்
தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்பு பணிப் பதக்கம் (பொங்கல் நாள்) 1 மதிப்பெண்

காவல் மற்றும் தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மாணவர்படை / நாட்டு நலப்பணிதிட்டம் / விளையாட்டுகளுக்கான சிறப்பு மதிப்பெண்கள் பெற தகுதியற்றவர் ஆவார்.

ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 5 சிறப்பு மதிப்பெண்கள் மட்டுமே கோரமுடியும். ஒரு விண்ணப்பதாரர் சம மதிப்பெண்கள் பெறக்கூடிய இரண்டு பதக்கங்களைப் பெற்றிருப்பின், ஒரு பதக்கத்திற்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும்.

14. தற்காலிகத் தேர்வுப்பட்டியல் :

அ. எழுத்துத் தேர்வு, உடல்திறன் போட்டி, நேர்முகத்தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு, விண்ணப்பதாரர் சார்ந்த பிரிவு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிகத் தேர்வுபட்டியல் தயார்செய்யப்படும்.

ஆ. நிலைய அலுவலர் பதவிக்கு, அனைத்து தகுதிகளும் சமமாக இருக்கும் பட்சத்தில், நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு சேவை கல்லூரியில் ஏதேனும் ஒரு பயிற்சிவகுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த நபருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இ. இறுதி தற்காலிகத் தேர்வின்போது சமமான தகுதி மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் ஒரே பிறந்த தேதியையும் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்குள் எவரொருவர் சாரணர் இயக்கத்தில் பங்குபெற்று மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் சான்றிதழைப் பெற்றுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்

ஈ. இறுதி தற்காலிகத் தேர்வின்போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சமமான தகுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயதில் மூத்தவருக்கு இறுதி தற்காலிகத் தேர்வின்போது முன்னுரிமை வழங்கப்படும்.

15. மருத்துவப் பரிசோதனை, குணநலன்கள் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் குறித்த விசாரணை:

தற்காலிகமாகத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கும், குணநலன்கள் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் குறித்த விசாரணைக்கு சம்பந்தப்பட்ட துறையினரால் உட்படுத்தப்படுவார்கள்.

16. தேர்வுக் கட்டணம் :

தேர்வுகட்டணம் ரூபாய்.500/-.துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் பொது மற்றும் துறைசார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் சேர்த்து விண்ணப்பித்தால் அவன்/அவள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி மூலம் செலுத்தலாம்.

 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்