தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

தகுதி வரம்பு

தேர்வு வயது கல்வித் தகுதிகள் உயரம் மார்பளவு
(ஆண்களுக்கு மட்டும்)
ஆண்கள் பெண்கள்
காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) 20 வயது முதல் 30 வயது வரை இளங்கலை பட்டம் பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) /மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்திடமிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும். (10+2+3 ) முறை 170 செ.மீ. 159 செ.மீ. குறைந்த அளவு 81 செ.மீ. மூச்சு உள்ளிழுக்கப்பட்ட நிலையில் 5 செ.மீ. விரிவடைந்த நிலையில் குறைந்த அளவு 86 செ.மீ. இருக்க வேண்டும்.
காவல் உதவி ஆய்வாளர் (தொழில் நுட்பம்) 20 வயது முதல் 30 வயது வரை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி குழுமத்தால் வழங்கப்பட்ட, மின்னனு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டயப்படிப்பு குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட B.E அல்லது B.Tech பட்டப்படிப்பில் மின்னனு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
163 செ.மீ. 154 செ.மீ. குறைந்த அளவு 80 செ.மீ. மூச்சு உள்ளிழுக்கப்பட்ட நிலையில் 5 செ.மீ. விரிவடைந்த நிலையில் குறைந்த அளவு 85 செ.மீ. இருக்க வேண்டும்
காவல் உதவி ஆய்வாளர் (விரல் ரேகை) 20 வயது முதல் 30 வயது வரை பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு இளங்கலை அறிவியல் பட்டம் ( 10+2+3 ) முறை 163 செ.மீ. 154 செ.மீ. -
இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொதுத் தேர்வு 18 வயது முதல் 26 வயது வரை 10ம் வகுப்பு தேர்ச்சி 170 செ.மீ. 159 செ.மீ. குறைந்த அளவு 81 செ.மீ. மூச்சு உள்ளிழுக்கப்பட்ட நிலையில் 5 செ.மீ. விரிவடைந்த நிலையில் குறைந்த அளவு 86 செ.மீ. இருக்க வேண்டும்.

தளர்வுகள் :

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ( இஸ்லாமியர் ), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கான தளர்வுகள்

தேர்வு வயது
காவல் உதவி ஆய்வாளர் ( தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) 32 வருடங்கள்
காவல் உதவி ஆய்வாளர் ( தொழில் நுட்பம் ) 32 வருடங்கள்
காவல் உதவி ஆய்வாளர் ( விரல் ரேகை ) 32 வருடங்கள்
இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொதுத் தேர்வு 28 வருடங்கள்

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் ( அருந்ததியர் ) மற்றும் பழங்குடியினருக்கான தளர்வுகள்

தேர்வு வயது உயரம்
ஆண்கள் பெண்கள்
காவல் உதவி ஆய்வாளர் ( தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ) 35 வருடங்கள் 167 செ.மீ. 157 செ.மீ.
காவல் உதவி ஆய்வாளர் ( தொழில் நுட்பம் ) 35 வருடங்கள் 160 செ.மீ. 152 செ.மீ.
காவல் உதவி ஆய்வாளர் ( விரல் ரேகை ) 35 வருடங்கள் 160 செ.மீ. 152 செ.மீ.
இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொதுத் தேர்வு 31 வருடங்கள் 167 செ.மீ. 157 செ.மீ.

ஆதரவற்ற விதவைகளுக்கான தளர்வுகள்

தேர்வு வயது
காவல் உதவி ஆய்வாளர் ( தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ) 37 வருடங்கள்
காவல் உதவி ஆய்வாளர் ( தொழில் நுட்பம் ) 37 வருடங்கள்
காவல் உதவி ஆய்வாளர் ( விரல் ரேகை ) 37 வருடங்கள்
இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொதுத் தேர்வு 37 வருடங்கள்

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ படை வீரர்களுக்கான தளர்வுகள்

தேர்வு வயது உயரம் மற்றும் மார்பளவு
காவல் உதவி ஆய்வாளர் ( தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ) 47 வருடங்கள் விலக்கு அளிக்கப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர் ( தொழில் நுட்பம் ) 47 வருடங்கள் விலக்கு இல்லை.
காவல் உதவி ஆய்வாளர் ( விரல் ரேகை ) 47 வருடங்கள் விலக்கு அளிக்கப்பட்டது.
இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொதுத் தேர்வு 47 வருடங்கள் விலக்கு அளிக்கப்பட்டது.
 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்