JR 2023 : கூடுதல் விண்ணப்பதாரர்களுக்கான நேர்முக தேர்விற்கான அழைப்பு கடிதம் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு விரைவில் அனுப்பப்படும்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அரசாணை எண்.1806, தேதி 29.11.1991ன் படி அமைக்கப்பட்டது. தற்பொழுது காவல்துறை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை இவ்வாரியத்தின் தலைவராகக் கொண்டும், காவல்துறை கூடுதல் இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை உறுப்பினராகக் கொண்டும் காவல்துறை தலைவர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை உறுப்பினர் செயலராகக் கொண்டும் இவ்வாரியம் செயல்பட்டு வருகின்றது. மேலும் இரண்டு காவல் கண்காணிப்பாளர்கள், காவல் அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களைக் கொண்டு இத்தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை சிறப்பாக நடத்தி வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கீழ்கண்ட முகவரியில் தனிக்கட்டடத்தில் இயங்கி வருகிறது.
தமிழக காவல் துறையின் ஒரு அங்கமான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நவம்பர் 1991ம் ஆண்டு முதல் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய சீருடைத் துறைகளுக்கு கீழ்கண்ட பதவிகளுக்கான தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து வருகிறது.
1. காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) மற்றும் நிலைய அதிகாரி (ஒருங்கிணைந்த தேர்வு)
2. காவல் சார்பு ஆய்வாளர் (தொழில் நுட்பம்)
3. காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை)
4. இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (பொதுத்தேர்வு)
கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் விபரம் :
ஆண்டு | காவல் சார்பு ஆய்வாளர் | நிலைய அதிகாரி | மொத்தம் | ||
---|---|---|---|---|---|
ஆண்கள் | பெண்கள் | ஆண்கள் | பெண்கள் | ||
2023 | 469 | 152 | 97 | 32 | 750 |
ஆண்டு | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
---|---|---|---|
2010 | 768 | 328 | 1096 |
2015 | 812 | 266 | 1078 |
2019 | 697 | 271 | 968 |
2022 | 370 | 68 | 438 |
ஆண்டு | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
---|---|---|---|
2018 | 133 | 69 | 202 |
ஆண்டு | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
---|---|---|---|
1999-2000 | 127 | 55 | 182 |
2006 | 146 | 63 | 209 |
2018 | 208 | 101 | 309 |
ஆண்டு | இரண்டாம் நிலை காவலர்கள் | இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் | தீயணைப்பாளர்கள் | மொத்தம் | ||
---|---|---|---|---|---|---|
ஆண்கள் | பெண்கள் | ஆண்கள் | பெண்கள் | ஆண்கள் | ||
2010 | 6,330 | 2644 | 461 | 29 | 633 | 10097 |
2012 | 10317 | 1835 | 377 | - | 791 | 13320 |
2017 | 10,576 | 2,564 | 954 | 37 | 1,491 | 15,622 |
2017-2018 | 4,264 | 1,267 | 315 | 36 | 237 | 6,119 |
2019 | 5,962 | 2,410 | 188 | 22 | 191 | 8,773 |
2020 | 7,339 | 3,051 | 112 | 17 | 1,293 | 11,812 |
2022 | 2,619 | 652 | 153 | 8 | 120 | 3,552 |
ஆண்டு | ஆண்கள் | மொத்தம் |
---|---|---|
2013-14 | 10099 | 10099 |
ஆண்டு | ஆண்கள் | மொத்தம் |
---|---|---|
2015 | 8500 | 8500 |
2017 | 59 | 59 |
2018 | 7 | 7 |
2020 | 2 | 2 |
மொத்தம் | 8568 |