தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

பொதுத் தேர்வு

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு

1. கல்வித் தகுதி:

(i).

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கோரும் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதிக்கான சான்றிதழை ஏற்றுக்கொள்வதற்குரிய சமநிலைச் (equivalence) சான்றிதழை பெற்று பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு சமநிலைச் (equivalence) சான்றிதழை பெற்று பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் 10-ம் வகுப்பு தேர்ச்சி இணைக்கல்விச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது.

(ii).

விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும்.

(iii).

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்

2. அனைத்துப் பதவிகளுக்கும் விண்ணப்பிப்போருக்கு இருக்க வேண்டிய வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதியன்று 18 வயது நிறைவுற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:

பிரிவு உச்ச வயது வரம்பு

பொதுப் பிரிவு

26 வயது

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்

28 வயது

ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர்

31 வயது

திருநங்கைகள்

31 வயது

ஆதரவற்ற விதவைகள்

37 வயது

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள்

47 வயது

3. வகுப்புவாரி இடஒதுக்கீடுகள் :

i. அரசு விதிகள் மற்றும் உத்தரவுகளின்படி வகுப்புவாரி இடஓதுக்கீடு கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன

பொதுப் பிரிவு

31%

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

26.5%

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்)

3.5%

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்

20%

ஆதிதிராவிட வகுப்பினர்

15%

ஆதிதிராவிட வகுப்பினர் (அருந்ததியர்)

3%

பழங்குடியின வகுப்பினர்

1%

ii) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழைப் பெற்றிருப்பர்வகள் மட்டும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டில் பரிசீலிக்கப்படுவார்கள்.

4) சிறப்பு ஒதுக்கீடுகள் :
I) 10% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு:

காவல், சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மொத்த காலிப்பணியிடங்களில் 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்.விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் இத்தேர்விற்கு விளம்பரம் வெளியிட்ட தேதிக்கு முன்னர் 5 ஆண்டுகளுக்குள் கலந்துகொண்டு பெற்ற விளையாட்டுப் படிவம் - I / படிவம் - II / படிவம் – III-ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அல்லது தமிழ்நாடு ஒலிம்பிக் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையம் அல்லது தமிழக பல்கலைக்கழகம் சார்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளின் மூலம் கலந்து கொண்டு பெற்றிருத்தல் வேண்டும்.

விளையாட்டுப் படிவத்தின் பெயர் விவரம் சான்றிதழ் வழங்கும் அலுவலர்

படிவம் - I

இந்திய நாட்டின் சார்பாக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்.

செயலாளர், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு.

படிவம் - II.

தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொண்டவர்

செயலாளர், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அல்லது செயலாளர், மாநில விளையாட்டு அமைப்பு.

படிவம் - III.

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழக பல்கலைக்கழகம் சார்பாக கலந்து கொண்டவர்

கல்லூரி முதல்வர் , இயக்குநர் அல்லது பல்கலைக்கழகத்தின் விளையாட்டு பொறுப்புஅதிகாரி

அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள் :

1.கூடைப்பந்து 2.கால்பந்து 3.வளைகோல் பந்து(ஹாக்கி) 4.கையுந்துபந்து 5.கைப்பந்து 6.கபடி 7.மல்யுத்தம் 8.குத்துச்சண்டை 9.ஜிம்னாஸ்டிக்ஸ் 10.ஜூடோ 11.பளுதூக்குதல் 12.நீச்சல்போட்டி 13.தடகளப் போட்டிகள் 14.குதிரையேற்றம் 15.துப்பாக்கி சுடுதல் மற்றும் 16. சிலம்பம்.

II) 5% இடஒதுக்கீடு

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள்:

i. முன்னாள் இராணுவத்தினர் அவர்களது இணையவழி விண்ணப்பத்தில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதி குறிப்பிட்ட சான்றிதழை (Discharge certificate with date of discharge) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ii. முன்னாள் இராணுவத்தினர் தங்கள் டிஸ்சார்ஜ் சான்றிதழை பதிவேற்றத் தவறினால், அவர்களின் விண்ணப்பம் முன்னாள் படைவீரர் பிரிவின் கீழ் பரிசீலிக்கப்படாது.

iii. இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் அவர்களது இணையவழி விண்ணப்பத்தில் சுயஉறுதிமொழியுடன் கூடிய தங்களது படை பிரிவு அலுவலரிடத்தில் (commanding officer) விடுவிக்கப்படும் தேதி குறிப்பிட்ட (going to retire) உரிய படிவத்தில் பெற்ற சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் (மாதிரிச் சான்றிதழ் பிற்சேர்க்கையில் உள்ளது). இவ்விதம் இச்சான்றிதழை பதிவேற்றம் செய்யத் தவறினால் இவ்வொதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

iv. முன்னாள் இராணுவத்தினர் , இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்றாண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்

III) 3% ஆதரவற்ற விதவைகளுக்கான (Destitute Widow) ஒதுக்கீடு:

(i) மாவட்ட/மாநகர ஆயுதப்படைக்கான பெண்கள், திருநங்கைகள் மற்றும் சிறைத்துறை பெண்களுக்குரிய காலிப்பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு ஒதுக்கப்படும்.

(ii) ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழை வருவாய் கோட்ட அலுவலர் (RDO / சார் ஆட்சியர் (Sub-Collector) / உதவி ஆட்சியர் (Assistant Collector) அவர்களிடமிருந்து பெற்று இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்விதம் இச்சான்றிதழை பதிவேற்றம் செய்யத் தவறினால் இவ்வொதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

5. 20% தமிழ் பயிற்று மொழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை:

இத்தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு வகுப்பு வாரியாக 20% முன்னுரிமை ஒவ்வொரு தேர்வு நிலையிலும் வழங்கப்படும்.

6. திருநங்கைகள் (Transgenders):

(i) திருநங்கைகள், ஆண் அல்லது பெண் அல்லது மூன்றாம் பாலினம் என ஏதேனும் ஒன்றினை தனது பாலினமாக தேர்வு செய்துகொள்ளலாம். திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவரென விண்ணப்பம் செய்தால் தங்களது விண்ணப்பத்துடன், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்திலிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

(ii) திருநங்கைகள், ஆண் பாலினத்தை தேர்வு செய்தால் ஆண்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு மற்றும் உடல்திறன் போட்டிகளிலும், பெண் அல்லது மூன்றாம் பாலினத்தை தேர்வு செய்தால் பெண்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு மற்றும் உடல்திறன் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும்.

(iii) திருநங்கைகள், மூன்றாம் பாலினத்தவர் என விண்ணப்பித்தால் இவர்கள் பாலினத்தில் பெண் விண்ணப்பதாரர்களாகப் பாவிக்கப்படுவார்கள்

(iv) திருநங்கைகள், தனது சாதிக்குரிய சாதிக் சான்றிதழை சமர்ப்பித்தால், அவர்கள் பிற விண்ணப்பதாரர்களைப் போன்று அவரவர் வகுப்புவாரி ஒதுக்கீடு பெறலாம்.

(v) திருநங்கைகள், சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காவிடில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் (MBC) பாவிக்கப்படுவார்

7. மதிப்பெண்கள் ஒதுக்கீடு :

வ.எண்

விவரங்கள்

மதிப்பெண்கள்

1

முதன்மை எழுத்துத் தேர்வு

70 மதிப்பெண்கள்

2

உடல்திறன் போட்டிகள்

24 மதிப்பெண்கள்

3

சிறப்பு மதிப்பெண்கள்

6 மதிப்பெண்கள்

மொத்தம்

100 மதிப்பெண்கள்

8. எழுத்துத் தேர்வு:
பகுதி – I, தமிழ் மொழி தகுதித்தேர்வு:

i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாதாளாக இருக்கும்.

iii. இத்தேர்வானது 80 மதிப்பெண்கள் 80 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான காலஅளவு 80 நிமிடங்கள். (1 மணி 20 நிமிடங்கள்).

iv. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

பகுதி – II, முதன்மை எழுத்துத் தேர்வு:

i)பகுதி – அ: பொது அறிவு - 45 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) பகுதி – ஆ: உளவியல் - 25 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா)

ii) எழுத்துத் தேர்வுக்கான நேரம் 1 மணி 20 நிமிடங்கள்

iii) எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற வேண்டும்

9. உடற்கூறு அளத்தலல் (Physical Measurement Test)

உடற்கூறு அளத்தலில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு உயரம் மற்றும் மார்பளவு அளத்தல் நடைபெறும் , பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உயரம் அளத்தல் மட்டுமே நடைபெறும், இத்தேர்வுக்கான குறைந்தபட்ச உடற்கூறு அளவுகள் பின்வருமாறு

(i) ஆண்கள்

உயரம்

i) பொதுப் பிரிவினர் (OC),
பிற்படுத்தப்பட்டோர்; (BC),
பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) [BC(M)] மற்றும்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் (MBC/DNC)

குறைந்த அளவு 170 செ.மீ.

(ii) ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST).

குறைந்த அளவு 167 செ.மீ.

மார்பளவு

i) சாதாரண நிலையில் (ii) மூச்சை உள்வாங்கிய நிலையில் விரிவாக்கம்

குறைந்த அளவு 81 செ.மீ குறைந்த அளவு விரிவாக்கம் 5 செ.மீ (மூச்சை உள்வாங்கிய விரிவாக்க நிலையில் குறைந்த அளவு 86 செ.மீ)

(ii) பெண்கள் மற்றும் திருநங்கைகள் :

உயரம்

(i) பொதுப் பிரிவினர் (OC), பிற்படுத்தப்பட்டோர் (BC), பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) [BC(M)] மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் (MBC/DNC)

குறைந்த அளவு 159 செ.மீ.

(ii)ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST).

குறைந்த அளவு 157 செ.மீ.

(iii) முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஒய்வுபெறவுள்ள இராணுவத்தினர் .

இவர்களுக்கு உடற்கூறு அளத்தல் தேர்வு (Physical Measurement Test) கிடையாது.

10 . உடல்தகுதித் தேர்வு (Endurance Test)

(i)

ஆண்கள்

1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

(ii)

பெண்கள் மற்றும் திருநங்கைகள்

400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்

(iii)

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இதேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினர் இராணுவப் படை வீரர்கள்

1500 மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்

11. உடல்திறன் போட்டி (Physical Efficiency Test)

விண்ணப்பதாரர் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் மதிப்பெண் ஏதும் வழங்கப்படாமல் அடுத்த போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.


அ) ஆண்கள்:

வ. எண்

நிகழ்வுகள்

ஒரு நட்சத்திரம் (4 மதிப்பெண்கள் ) இரு நட்சத்திரங்கள் (8 மதிப்பெண்கள்)
1

கயிறு ஏறுதல்

5.0 மீட்டர்

6.0 மீட்டர்

2

நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல்

நீளம் தாண்டுதல்

3.80 மீட்டர்

4.50 மீட்டர்

உயரம் தாண்டுதல்

1.20 மீட்டர்

1.40 மீட்டர்

3

ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர்

100 மீட்டர்

15.00 வினாடிகள்

13.50 வினாடிகள்

400 மீட்டர்

80.00 வினாடிகள்

70.00 வினாடிகள்

i. ஆண் விண்ணப்பதாரர்கள் கயிறு ஏறுதல் நிகழ்வில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்நிகழ்வில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும்.

ii. நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் நிகழ்வில் விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

iii. 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

ஆ) பெண்கள் மற்றும் திருநங்கைகள்:

வ. எண் நிகழ்வுகள் ஒரு நட்சத்திரம் (4 மதிப்பெண்கள்) இரு நட்சத்திரங்கள் (8 மதிப்பெண்கள்)
1

நீளம் தாண்டுதல்

3.0 மீட்டர்

3.75 மீட்டர்

2

குண்டு எறிதல் (அல்லது) கிரிக்கெட் பந்து எறிதல்

குண்டு எறிதல் (4 Kg)

4.25 மீட்டர்

5.50 மீட்டர்

கிரிக்கெட் பந்து எறிதல்

17 மீட்டர்

24 மீட்டர்

3

ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர்

100 மீட்டர்

17.50 வினாடிகள்

15.50 வினாடிகள்

200 மீட்டர்

38.00 வினாடிகள்

33.00 வினாடிகள்

i) நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் / கிரிக்கெட் பந்து எறிதல் நிகழ்வில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.
ii) 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் நிகழ்வில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

இ) முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள்:

வ. எண் நிகழ்வுகள் ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்)
1

குண்டு எறிதல் (7.26 kg)

5.0 மீட்டர்

6.0 மீட்டர்

2

நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல்

நீளம் தாண்டுதல்

3.25 மீட்டர்

4.50 மீட்டர்

உயரம் தாண்டுதல்

0.90 மீட்டர்

1.40 மீட்டர்

3

ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர்

100 மீட்டர் ஓட்டம்

17.00 வினாடிகள்

13.50 வினாடிகள்

400 மீட்டர் ஓட்டம்

85.00 வினாடிகள்

70.00 வினாடிகள்

i) குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும்.
ii) 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்ட நிகழ்வில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

12. அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் (Original Certificate Verification)

அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தலின் போது விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்கள் மட்டுமே சரிபார்ப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்படும். அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு, வயதுதளர்வு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான உரிமைகளை இழப்பார்கள். இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யாமல் ஏதேனும் புதிய சான்றிதழ்கள் / நகல்கள் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டால் அவை கட்டாயமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

13. சிறப்பு மதிப்பெண்கள் (Special marks for NCC, NSS and Sports/Games)

விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் உயர்அளவாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அ) தேசிய மாணவர் படை (NCC) (உயர் அளவு மதிப்பெண்கள்- 2 )

ஒரு வருட உறுப்பினர் / A சான்றிதழ்

1/2 மதிப்பெண்

“B” சான்றிதழ் உடையவர்கள்

1 மதிப்பெண்

“C” சான்றிதழ் உடையவர்கள் / சார்பு அலுவலர் - அகில இந்திய அளவில் சிறந்த NCC மாணவர்.

2 மதிப்பெண்கள்

ஆ) நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) (உயர் அளவு மதிப்பெண்- 2)

i)

மாநில இளைஞர் விருது -
தேசிய இளைஞர் விருது -
மாநிலங்களுக்கிடையேயான (தேசிய) (அ) பன்னாட்டு நிகழ்ச்சிகளில் பங்குகொண்டமைக்கு

அ) குடியரசு தின அணி வகுப்பு
ஆ) தேசிய ஒருமைப்பாட்டு முகாம்.
இ) வீரதீர நிகழ்வுகள்
ஈ) கோடை கால / குளிர்கால முகாம்கள்
உ) மாநிலங்களுக்கிடையேயான
இளைஞர்களுக்கான பரிமாற்ற மற்றும் மாநிலங்களில் தங்கும் நிகழ்வுகள்
ஊ) தேசிய இளைஞர் விழா

மேற்காணும் சான்றிதழ்கள் Ministry of Youth Affairs and Sports, Government of India and its Sub-ordinate Office viz. NSS Regional Centres and by the State Governments concerned, Youth Welfare Department ஆல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

2மதிப்பெண்கள்

சான்றிதழ் Vice Chancellor/ Head of the Educational Institution / CEO / Programme Co-ordinator இவர்களால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ii)

நாட்டு நலப் பணி திட்டத்தில் 2 ஆண்டுகள் முடித்தவர்கள்/ நாட்டு நலப் பணி திட்டத்தில் பங்குபெற்று, அரசு ஆணை நிலை எண் 8, தேதி 21.01.2002-ல் உள்ள விதிமுறைகளை நிறைவு செய்தவர்கள் / மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பங்குகொண்டமைக்கான சான்றிதழ் பெற்றவர்கள்.

1 மதிப்பெண்.

iii)

திட்டச்செயல் தொண்டர்கள், மாவட்டத்திற்க்குள் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள்

½ மதிப்பெண்.

இ. விளையாட்டு (உயர் அளவு மதிப்பெண்- 2)

அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகள்: 1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல்பந்து (ஹாக்கி) 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச் சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளு தூக்குதல் 12. நீச்சல் போட்டி 13. தடகளப் போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கி சுடுதல் மற்றும் 16. சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு மட்டுமே சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பள்ளியின் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கல்வி மாவட்டங்கள் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் 1/2 மதிப்பெண்
கல்லூரியின் சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டலப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் (Inter Collegiate) 1/2 மதிப்பெண்
பல்கலைக்கழகங்களின் சார்பாக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது (படிவம் III) (Inter University) 1 மதிப்பெண்
மாவட்டங்கள் சார்பாக மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் 1 மதிப்பெண்
மாநிலத்தின் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது (படிவம் II) (Tamil Nadu) 1 ½ மதிப்பெண்கள்
தேசத்தின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது (படிவம் - 1) (India) 2மதிப்பெண்கள்

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு விளையாட்டுப் படிவம் I அல்லது II அல்லது III அல்லது பிற விளையாட்டுச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் மட்டும் மட்டுமே வழங்கப்படும். (10% விளையாட்டு ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது.)

விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கும் NCC/NSS/Sports/Games சான்றிதழ்களில், ஒவ்வொரு வகை சான்றிதழ்களிலும் உயரிய தகுதி கொண்ட ஒரு சான்றிதழுக்கு மட்டுமே உயர் அளவு மதிப்பெண் வழங்கப்படும். ஒரே மதிப்பெண் தகுதியில் ஒரு விண்ணப்பதாரர் இரண்டு சான்றிதழ்கள் பெற்றிருக்கும் பட்சத்தில் ஒரு சான்றிதழுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும்.

மேலே சொல்லப்பட்ட மூன்று வகைச் சான்றிதழ்களுக்கும் சேர்த்து வழங்கப்படும் மொத்த மதிப்பெண்கள் 6 மதிப்பெண்களுக்கு மிகாமல் இருக்கும்.

14 (அ) இறுதி தற்காலிகத் தேர்வுப் பட்டியல் (Final Provisional Selection List)
  1. எழுத்து தேர்வு, உடல்திறன் போட்டி மற்றும் NCC, NSS, Sports/Games சான்றிதழ்களுக்கான சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்களின் அடிப்படையிலும் மற்றும் விண்ணப்பத்தாரர்கள் தெரிவித்துள்ள பதவி விருப்ப முன்னுரிமைப்படியும், காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப வகுப்புவாரி விகிதாச்சாரத்தின்படி மாவட்ட / மாநகர ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

  2. இறுதி தற்காலிகத் தேர்வின் போது ஒன்றிற்கும் மேற்பட்ட விண்ணப்பத்தாரர்கள் ஒரே தகுதி மதிப்பெண் பெற்றிருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயதில் மூத்தவருக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும்.

  3. இறுதி தற்காலிகத் தேர்வின் போது ஒரே தகுதி மதிப்பெண் பெறும் விண்ணப்பத்தாரர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுள் எவரொருவர் சாரணர் இயக்கதில் பங்கு பெற்று மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் சான்றிதழைப் பெற்றுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  4. ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்பயிற்று மொழியில் பயின்றிருக்கும் விண்ணப்பத்தாரர்கள், 20% முன்னுரிமை அடிப்படையில் வகுப்பு வாரியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

(ஆ). மருத்துவப் பரிசோதனை மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த விசாரணை:

இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்படுபவர்கள், மருத்துவ பரிசோதனைக்கும், முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த காவல் விசாரணைக்கும், காவல், சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலமாக உட்படுத்தபடுவார்கள்.

15. தேர்வுக் கட்டணம்: ரூ 250/-

தேர்வுக் கட்டணம் ரூபாய்.250/-. விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம். தேர்வு கட்டணத்தை மேலே குறிப்பிடாத வேறுவழிகளில் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்