SI 2025 : இணையவழி விண்ணப்பத்தினை 07.04.2025 அன்று 1100 மணி முதல் 03.05.2025 அன்று 2359 மணி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கடைசி நிமிட நெரிசலை தவிர்க்க, கடைசி தேதிக்கு முன்பாகவே இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு.
பிரிவு | உச்ச வயது வரம்பு |
---|---|
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் | 32 வருடங்கள் |
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் | 35 வருடங்கள் |
திருநங்கைகள் | 35 வருடங்கள் |
ஆதரவற்ற விதவைகள் | 37 வருடங்கள் |
முன்னாள் இராணுவத்தினர் (அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் மூன்றாண்டுகளுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்) மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் படை வீரர்கள் | 47 வருடங்கள் |
20% காவல் துறை ஒதுக்கீட்டுத் தேர்வில் பங்கேற்கும் காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் | 47 வருடங்கள் |
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு இளங்கலை அறிவியலில் பட்டம் ( 10+2+3 ) முறை.
அ) ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் அரசு உத்தரவுகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீடு கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவு | 31% |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | 26.5% |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) | 3.5% |
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் | 20% |
ஆதிதிராவிட வகுப்பினர் | 15% |
ஆதிதிராவிட (அருந்ததியர்) வகுப்பினர் | 3% |
பழங்குடியின வகுப்பினர் | 1% |
ஆ) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழைப் பெற்றிருப்பவர்கள் மட்டும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் நபர் ஆனவர், அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் அவர்கள் 5 வருடங்கள் பணியாற்றி முடித்திருக்க வேண்டும். காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு தனியாக நடைபெறும். தகுதியுடைய காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் பொது மற்றும் காவல் துறை சார்ந்த தேர்விற்கும் விண்ணப்பிக்கலாம். காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளத்தல் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. காவல் துறை சார்ந்த விண்ணப்பத்தாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
அ. முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் படை வீரர்கள்:
i. அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1ம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 47 வருடங்கள்.
ii. முன்னாள் இராணுவத்தினர் ( இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்றாண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் ) மற்றும் இத்தேர்விற்கு இணையவழி விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினர் மட்டும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
ஆ. ஆதரவற்ற விதவை :
i. வயது வரம்பு தளர்வு: அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1 ஆம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 37 வருடங்கள்.
ii. ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழை வருவாய் கோட்ட அலுவலர் (RDO) சார் ஆட்சியர் (Sub-Collector) / உதவி ஆட்சியர் (Assistant Collector) அவர்களிடமிருந்து பெற்று இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்விதம் இச்சான்றிதழை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் ஆதரவற்ற விதவைக்கான ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டாது.
i. வயது வரம்பு தளர்வு: அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1ம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 35 வருடங்கள்.
ii. திருநங்கைகள், ஆண் அல்லது பெண் அல்லது மூன்றாம்பாலினம் என ஏதேனும் ஒன்றினை தனது பாலினமாக தேர்வு செய்து கொள்ளலாம்.திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவர் என விண்ணப்பம் செய்தால் தங்களது விண்ணப்பத்துடன், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்திலிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
iii. திருநங்கைகள், மூன்றாம் பாலினத்தவர் என விண்ணப்பித்தால் இவர்கள் பாலினத்தில் பெண் விண்ணப்பதாரர்களாகப் பாவிக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு 30% இடஒதுக்கீடு பொருந்தும்.
iv. திருநங்கைகள், தனது சாதிக்குரிய சாதிச் சான்றிதழை சமர்ப்பித்தால், அவர்கள் பிற விண்ணப்பதாரர்களைப் போன்று அவரவர் சார்ந்திருக்கும் வகுப்பினைப் பொருத்து வகுப்புவாரி ஒதுக்கீடு பெறலாம்.
v. திருநங்கைகள், சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காவிடில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் (MBC) பாவிக்கப்படுவார்கள்.
தேர்வு கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம்.
தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கீழ்கண்டவாறு மதிப்பெண்கள் பகிர்தளிக்கப்படும்.
பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு:
i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.
ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.
iii. இத்தேர்வானது 100 மதிப்பெண்கள் 100 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான காலஅளவு 100 நிமிடங்கள். (1 மணி 40 நிமிடங்கள்).
iv. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
vi. 20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.
vii. பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீட்டுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி தகுதித் தேர்வினை ஒருமுறை மட்டும் எழுத வேண்டும்.
பகுதி – II. முதன்மை எழுத்துத் தேர்வு:
அ) பொது விண்ணப்பதாரர்கள் :
வ.எண். | தேர்வுகள் | மதிப்பெண்கள் | |
---|---|---|---|
i. | முதன்மை எழுத்துத் தேர்வு | 85 மதிப்பெண்கள் | |
(அ) பொது அறிவு | 55 மதிப்பெண்கள் | ||
(ஆ) பொதுத் திறனாய்வு (General Ability), தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Analysis), உளவியல் தேர்வு (Psychology Test), தொடர்புத் திறன் (Communication Skills) மற்றும் தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability) ஆகியவற்றை உள்ளடக்கியது. | 30 மதிப்பெண்கள் | ||
ii. | சிறப்பு மதிப்பெண்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டுகள். | 5 மதிப்பெண்கள் | |
iii. | நேர்முகத் தேர்வு | 10 மதிப்பெண்கள் | |
மொத்தம் | 100 மதிப்பெண்கள் |
குறிப்பு :
i. எழுத்துத் தேர்வுக்கான காலம் 3 மணி நேரம்.
ii. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற 85 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
iii. வினாத்தாளில் 170 கொள்குறி வகை வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண் வழங்கப்படும்.
ஆ. காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் :
வ.எண். | தேர்வுகள் | மதிப்பெண்கள் | |
---|---|---|---|
i. | முதன்மை எழுத்துத் தேர்வு | 85 | |
(அ) பொது அறிவு | 45 | ||
(ஆ) பொதுத் திறனாய்வு (General Ability), காவல் நிர்வாகம் (Police Administration), குற்ற விசாரணை மற்றும் அடிப்படை தடய அறிவியல் (Crime Investigation and Basic Forensic Science), தருக்க பகுப்பாய்வுடன் கூடிய பொதுத் திறனாய்வு (General Ability Test includes Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Analysis), உளவியல் சோதனை (Psychology Test), தொடர்புத் திறன் மற்றும் தகவல்களை கையாளும் திறன் (Communication Skills and Information Handling ability), காவல் நிர்வாகம், குற்ற விசாரணை மற்றும் அடிப்படை தடய அறிவியல் பகுப்பாய்வு (Police Administration Crime Investigation and basic Forensic Science) காவலர்களின் அடிப்படை பயிற்சியில் கொடுக்கப்படும் பாடத்திட்டத்தின்படி இருக்கும். | 40 | ||
ii. | சிறப்பு மதிப்பெண்கள் தேசிய காவல் பணித் திறன் போட்டிகளில் பதக்கம் பெற்றிருத்தல் (தங்கப் பதக்கம் - 5 மதிப்பெண்கள், வெள்ளிப் பதக்கம் - 3 மதிப்பெண்கள் மற்றும் வெண்கலப் பதக்கம் - 2 மதிப்பெண்கள்) |
5 | |
iii. | நேர்முகத் தேர்வு | 10 | |
மொத்தம் | 100 |
i. எழுத்துத் தேர்வுக்கான காலம் 3 மணி நேரம்.
ii. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற 85 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
iii. வினாத்தாளில் 170 கொள்குறி வகை வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண் வழங்கப்படும்.
பொது ஒதுக்கீட்டு விண்ணப்பத்தாரர்களில் எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள், ஒவ்வொரு பிரிவிலும் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் இரண்டு மடங்கு மட்டுமே உடற்கூறு அளத்தல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். உடற்கூறு அளத்தல் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
உடற்கூறு அளத்தல் தேர்வு, உயரம் அளத்தல் தேர்வை மட்டுமே கொண்டுள்ளது. குறைந்தபட்சத் தகுதித் தேவை பின்வருமாறு.
I) ஆண்கள் :-
உயரம் | |
பொதுப் பிரிவினர் (OC),
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)], மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) |
குறைந்தபட்சம் 163 செ.மீ. |
ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST). |
குறைந்தபட்சம் 160 செ.மீ. |
II). பெண்கள் மற்றும் திருநங்கைகள் :-
உயரம் | |
பொதுப் பிரிவினர் (OC),
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)], மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) |
குறைந்தபட்சம் 154 செ.மீ. |
ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST). |
குறைந்தபட்சம் 152 செ.மீ. |
குறிப்பு :
i. 20% காவல் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளத்தல் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ii. முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினர் உடல்கூறு அளத்தல் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
i) உடற்கூறு அளத்தல் தேர்வில் தகுதி பெறும் பொதுவிண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
ii) துறை ஒதுக்கீட்டு விண்ணப்பத்தாரர்களில் எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள், ஒவ்வொரு பிரிவிலும் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் 1:2 விகிதத்தில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
iii) முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் 1:2 விகிதத்தில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்..
iv) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு வயது தளர்வு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான உரிமைகளை இழப்பார்கள். பதிவேற்றப்பட்ட சான்றிதழ்களைத் தவிர புதிய சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
i) உடல் அளவீட்டுத் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றில் தகுதி பெற்ற அனைத்து பொது விண்ணப்பதாரர்களும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்
ii) முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்ற காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடங்களுக்குகேற்ப 1:2 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்
iii) தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுவாரிய தலைமையகத்தில் நடத்தப்படும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்
iv) தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விளையாட்டுச் சான்றிதழ்கள் அல்லது தேசிய காவல் பணித் திறன் போட்டிகளில் பதக்கங்களை (காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்) பெற்ற விண்ணப்பதாரர்கள், சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்காக நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களை ஒரு புகைப்பட நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்
அதிகபட்சம் ஐந்து மதிப்பெண்களுக்கு உட்பட்டு கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி நேர்முகத் தேர்வின் போது விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
அ. தேசிய மாணவர் படை (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) :
ஒரு வருட உறுப்பினர் / A சான்றிதழ் | ½ மதிப்பெண் |
“B” சான்றிதழ் உடையவர்கள் | 1 மதிப்பெண் |
“C” சான்றிதழ் உடையவர்கள் / சார்பு அலுவலர் - அகில இந்திய அளவில் சிறந்த NCC மாணவர். | 2 மதிப்பெண்கள் |
ஆ. நாட்டு நலப்பணித் திட்டம் (அதிகபட்சம் 1 மதிப்பெண்) :
கீழ்க்காணும் மாநிலங்களுக்கிடையேயான தேசிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டமைக்கு - அ) குடியரசு தின அணி வகுப்பு - புதுடெல்லி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஊக்க முகாம், மாநில அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறையினால் மாநிலங்களுக்கிடையே இளைஞர்களுக்கான பரிமாற்ற திட்டங்களில் பங்கு பெற்றவர்கள். | 1/2 மதிப்பெண் |
மாநில அளவில் அல்லது தேசிய அளவில் சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட தன்னார்வலர் அல்லது புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர். | 1 மதிப்பெண் |
அரசு ஆணை நிலை எண் 8, தேதி 21.01.2002-ல் உள்ள விதிமுறைகளை நிறைவு செய்தவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக பங்குபெற்றவர்கள் அல்லது மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பங்குகொண்டமைக்கான சான்றிதழ் பெற்றவர்கள். | 1/2 மதிப்பெண் |
இ. விளையாட்டுகள் (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) :
அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுகள் : 1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல் பந்து(ஹாக்கி) 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச் சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளு தூக்குதல் 12. நீச்சல் போட்டி 13. தடகளப் போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கி சுடுதல் மற்றும் 16. சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.
i) விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலம் விளையாட்டில் பங்கேற்றிருக்க வேண்டும்.
ii) விண்ணப்பதாரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பெற்ற விளையாட்டுப் படிவம்- I அல்லது படிவம் - IIஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அல்லது தமிழ்நாடு ஒலிம்பிக் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையம் மூலம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பெற்றிருத்தல் வேண்டும்
iii) தமிழக பல்கலைக் கழகம் சார்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு படிவம்-III பெற்றிருத்தல் வேண்டும்.
பள்ளியின் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கல்வி மாவட்டங்கள் அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் | 1/2 மதிப்பெண் |
கல்லூரியின் சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் (Inter Collegiate) | 1/2 மதிப்பெண் |
பல்கலைக்கழகங்களின் சார்பாக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் III (Inter University) | 1 மதிப்பெண் |
மாவட்டங்கள் சார்பாக மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் | 1 மதிப்பெண் |
மாநிலத்தின் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழகம் சார்பாக கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் II (Tamil Nadu) | 1 1/2 மதிப்பெண் |
தேசத்தின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக கலந்து கொண்டவர்கள்அதாவது படிவம் I (India) | 2 மதிப்பெண்கள் |
ஒவ்வொரு வகை சான்றிதழ்களிலும் உயரிய தகுதி கொண்ட சான்றிதழுக்கு மட்டுமே உயர்அளவு மதிப்பெண் வழங்கப்படும்.
II. 20% காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் :
தேசிய காவல் பணித்திறன் போட்டிகளில் பதக்கம் வென்றிருத்தல் (அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்) | |
தங்கப் பதக்கம் | 5 மதிப்பெண்கள் |
வெள்ளிப் பதக்கம் | 3 மதிப்பெண்கள் |
வெண்கலப் பதக்கம் | 2 மதிப்பெண்கள் |
காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் விளையாட்டுகளுக்கான சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 5 சிறப்பு மதிப்பெண்கள் பெற தகுதியுடையவர் ஆவார். |
அ. முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் உயர்ந்தபட்ச மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்பவும் தற்காலிகத் தேர்வு பட்டியல் தயார் செய்யப்படும்.
ஆ. இறுதி தற்காலிகத் தேர்வின் போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சமமான தகுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயதில் மூத்தவருக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது முன்னுரிமை வழங்கப்படும்.
இ. இறுதி தற்காலிகத் தேர்வின் போது சமமான தகுதி மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் ஒரே பிறந்த தேதி கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுள் எவரொருவர் சாரணர் இயக்கத்தில் பங்கு பெற்று மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் சான்றிதழைப் பெற்றுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஈ. பொது விண்ணப்பதாரர்களில் 1 ஆம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு தேர்வு நிலையிலும் முன்னுரிமை அடிப்படையில், அனைத்து காலிப்பணியிடங்களில் 20% ஒதுக்கீடு வழங்கப்படும்.
தற்காலிகமாகத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த காவல் துறை விசாரணைக்கும் உட்படுத்தப்படுவார்கள்.