தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Q ) 1. நான் ஏன் அடுத்தகட்ட தேர்வுகளான உடற்கூறு அளத்தல் தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை ?

ஒவ்வொருகட்ட தேர்வும் விண்ணப்பதாரர்கள் சார்ந்த வகுப்பினை (COMMUNITY) பொருத்து தனி தகுதி மதிப்பெண்களைக் கொண்டிருக்கும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் வகுப்பின் அடிப்படையில் தேவைப்படும் தகுதி மதிப்பெண்கள் பெறாவிட்டால், அவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தகுதி மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்வதற்காக, தகுதி மதிப்பெண் விவரங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தொகுத்து வழங்கப்படும்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தனித்தகுதி மதிப்பெண் முடிவு செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு கட்ட தேர்வும் சதவிகித அடிப்படையிலான தேர்வாகும். எழுத்துத் தேர்வில் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அசல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு 5 மடங்கு என்ற அளவில் இருக்கும். அதே போன்று சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ) மற்றும் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) ஆகிய பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அசல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு 2 மடங்கு என்ற அளவிலும், சார்பு ஆய்வாளர் (தொழில் நுட்பம்) பணியிடங்களுக்கு 3 மடங்கு என்ற விகிதத்திலும் இருக்கும். ஒவ்வொருகட்ட தேர்விலும், கடைசியாக தேர்வு பெறும் விண்ணப்பதாரரின் தகுதி மதிப்பெண்ணானது அவர் சார்ந்த வகுப்பின் தனித்தகுதி மதிப்பெண்ணாக கொள்ளப்படும். மேலும், முந்தைய தேர்வின் தனித்தகுதி மதிப்பெண்களும், தற்போதைய தேர்வின் தனித்தகுதி மதிப்பெண்களும் ஒன்றாக இருக்காது. ஒவ்வொரு தேர்விலும், விண்ணப்பதாரர்கள் பெறும் மொத்த மதிப்பெண்களைப் பொருத்து வேறுபடும்.

ஒவ்வொருகட்ட தேர்வின் முடிவுகளும் அவ்வப்பொழுது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் அவ்வப்பொழுது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை பார்த்து தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு நுழைவுச்சீட்டு/அழைப்புக்கடிதம் ஆகியவை வெளியிடப்படும் பொழுது அதுபற்றிய தகவல், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், தகுதி பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ் செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சிறைத் துறை இயக்குநர் ஆகியவர்கள் தரும் காலிபணியிடங்களுக்கேற்பவும் மற்றும் அவர்களிடமிருந்து காலிபணியிடங்கள் பற்றிய அறிக்கை பெற்றவுடன் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வு செயல்முறை ஒவ்வொரு ஆண்டும் தொடங்கப்படும்.

பொதுத் தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. பொதுத் தேர்வுக்கு பின்வரும் மூன்று தேர்வுகள் மட்டுமே உண்டு.

1) தமிழ் மொழி தகுதித்தேர்வு

2) முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும்
3) உடல் பரிசோதனை தேர்வு அதாவது உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை மட்டுமே உண்டு.

முடியாது. அனைத்து விண்ணப்பங்களும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தின் மூலமாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் பதவிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூபாய்.130/- காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) மற்றும் காவல் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) மற்றும் காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பதவிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூபாய்.500/- ஆகும்.

தேர்வுக்கட்டணத்தை இணைய வழி செலுத்துதல் (Online payment) முறையில் (வலை வங்கி (Net banking) /கடன் அட்டை (Credit Card) மற்றும் பற்று அட்டை (Debit Card) மூலம்) செலுத்தலாம் அல்லது இணையவழியில்லாமல் செலுத்துச்சீட்டு (Challan) மூலமாக SBI (பாரத ஸ்டேட் வங்கி)-யின் அனைத்து கிளைகளிலும் செலுத்தலாம்.

கிடையாது. 1 ஆம் வகுப்பு முதல், முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றால் மட்டுமே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் உடற்கூறு அளத்தல் தேர்வின்பொழுது எண் முறை உயரம் அளத்தல் கருவி (Digital Height Measurement Device) மூலம் அளக்கப்படும் உயரம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

இல்லை, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 16 விளையாட்டுகளை தவிர வேறு எந்த விளையாட்டுகளும் விளையாட்டு இடஒதுக்கீட்டுக்கும், சிறப்பு மதிப்பெண்ணுக்கும் தகுதியுடையது இல்லை.

வயது வரம்பு விதிகளில் திருநங்கைகள் (SC) தாழ்த்தப்பட்ட வகுப்பினராகவும், தேர்வு நடவடிக்கைகளில் (MBC) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் கருதப்படுவார்கள், திருநங்கைகள், ஆண் பாலினத்தை தேர்வு செய்தால் ஆண்களுக்கான உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு மற்றும் உடல்திறன் போட்டிகளிலும், பெண் அல்லது மூன்றாம் பாலினத்தை தேர்வு செய்தால் பெண்களுக்கான உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு மற்றும் உடல்திறன் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும்.

இல்லை. மாவட்ட துணை ஆட்சியர், உதவி ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர் ஆகியவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ் மட்டுமே ஆதரவற்ற விதவைக்கான இடஒதுக்கீடு மற்றும் வயது வரம்பு தளர்வுக்குத் தகுதியுடையதாகும்.

அனைத்து தேர்வுகளுக்கும் குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பை கணக்கிடுவதற்கான தேதி, அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1 ஆம் தேதியாகும்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் எந்தவொரு தேர்வுக்கும் எத்தனை முறை கலந்துகொள்ளலாம் என்ற வரையறை கிடையாது. விண்ணப்பதாரர்களின் வயது வரம்பினைப் பொருத்து எத்தனை முறை வேண்டுமென்றாலும் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்